திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி பெண்ணிற்கு பாலியல் தொல்லை: சிறப்பு எஸ்ஐ கைது
திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் கடந்த 04-01-2022 அன்று பள்ளிகரணை காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் (54), என்பவரை சந்தித்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணின் தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்த அந்த பெண்ணிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசியதை அடுத்து திருமணம் ஆகவில்லை எனக் கூறியதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து ஆண்ட்ரூஸ் கார்டுவெல்-க்கு வயது அதிகம் என்பதும் தன்னை ஏமாற்றி தன்னுடன் பழகியதும் தெரியவந்தது. அதனால் அவரை விட்டு விலகியதால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாக அந்தப் பெண் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் மீது புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், நான்கு மாதங்களுக்குப் பிறகு கொல்கத்தாவில் வைத்து அவரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் கடந்த 04-01-2022 அன்று பள்ளிகரணை காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் (54), என்பவரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணின் தாயார் இறந்த மன அழுத்தத்தில் இருந்த அந்த பெண்ணிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் ஆறுதலாக பேசியதை அடுத்து திருமணம் ஆகவில்லை எனக் கூறியதை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து ஆண்ட்ரூஸ் கார்டுவெல்-க்கு வயது அதிகம் என்பதும் தன்னை ஏமாற்றி தன்னுடன் பழகியதும் தெரியவந்தது. அதனால் அவரை விட்டு விலகியதால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டியதாக அந்தப் பெண் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் மீது புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த போலீசார், நான்கு மாதங்களுக்குப் பிறகு கொல்கத்தாவில் வைத்து அவரை கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






