உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்: கோரிக்கை வராத தொகுதி எது? – முதலமைச்சர் சூசகம்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில், 233 தொகுதிகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால், ஒரேயொரு தொகுதியில் இருந்து மட்டும் கோரிக்கை வரவில்லை, அது யாருடையது என்று சொல்ல விரும்பவில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் தேதி திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவுபெற்றதை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின், அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டுமென தெரிவித்திருந்தார். அவ்வாறு பட்டியலில் இடம்பெறும் கோரிக்கைகள், அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களாக இருந்தால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் தங்களது சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்படாத பணிகளை கடிதமாக வழங்கக் கோரி இருந்தேன். அதில், 233 தொகுதிகளுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரேயொரு தொகுதியில் இருந்து மட்டும் கோரிக்கை வரவில்லை என தெரிவித்தார். மேலும் அது யாருடையது என்று நான் சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில், 233 தொகுதிகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஆனால், ஒரேயொரு தொகுதியில் இருந்து மட்டும் கோரிக்கை வரவில்லை, அது யாருடையது என்று சொல்ல விரும்பவில்லை என முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் தேதி திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவுபெற்றதை யொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின், அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
அவ்வாறு பட்டியலில் இடம்பெறும் கோரிக்கைகள், அரசுத் திட்டங்களின்கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களாக இருந்தால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் தங்களது சட்டமன்ற தொகுதிகளில் நிறைவேற்றப்படாத பணிகளை கடிதமாக வழங்கக் கோரி இருந்தேன்.
அதில், 233 தொகுதிகளுக்கு கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரேயொரு தொகுதியில் இருந்து மட்டும் கோரிக்கை வரவில்லை என தெரிவித்தார். மேலும் அது யாருடையது என்று நான் சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
What's Your Reaction?






