அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல்வர், முன்னாள் முதல்வர் உருவம் பொறித்த தங்கக்காசு பரிசு!
அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, உதயசூரியன் சின்னங்கள் பொறித்த தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் முதல்வர் உருவப்படம் பொறித்த தங்கக் காசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, உதய சூரியன் சின்னம் பொரித்த வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்படுகின்றன.

அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி, உதயசூரியன் சின்னங்கள் பொறித்த தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்கும் மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் முதல்வர் உருவப்படம் பொறித்த தங்கக் காசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, உதய சூரியன் சின்னம் பொரித்த வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்படுகின்றன.
What's Your Reaction?






