ஈரோடு இடைத்தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறதா பாஜக? விரைவில் அண்ணாமலை ஆலோசனை!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க மாநில அளவில் குழுவை அமைத்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலானது வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வும் நேரடியாக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் பா.ஜ.க. சார்பில் மாநில அளவில் குழு அமைத்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் மாவட்ட தலைவர், ஈரோடு தெற்கு V.C.வேதானந்தம், Dr..C.சரஸ்வதி MLA முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர், N.P.பழனிசாமி தேசிய பொதுக்குழு உறுப்பினர், S.A.சிவசுப்ரமணியம் மாவட்ட பார்வையாளர் உள்ளிட்ட 14 பேர் இடம் பெற்றுள்ளனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
What's Your Reaction?






