”மக்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கணும்” - சேகுவேரா மகள் சென்னையில் பேச்சு
வெற்றி பெறும் வரை மக்களுக்காக நாம் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என உலக புரட்சியாளர் சேகுராவின் மகள் அலைய்டா குவேரா சென்னையில் பேசினார். கியூபா நாட்டின் விடுதலைக்காகவும் உலக புரட்சியாளராகவும் செயல்பட்ட சேகுவாராவின் மகள் அலையிடா குவாரா இந்திய நாட்டு பயணமாக வந்திருக்கிறார். 2 நாள் சென்னை வந்திருக்கக்கூடிய அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் வரவேற்பு அளித்தனர்.

வெற்றி பெறும் வரை மக்களுக்காக நாம் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என உலக புரட்சியாளர் சேகுராவின் மகள் அலைய்டா குவேரா சென்னையில் பேசினார்.
கியூபா நாட்டின் விடுதலைக்காகவும் உலக புரட்சியாளராகவும் செயல்பட்ட சேகுவாராவின் மகள் அலையிடா குவாரா இந்திய நாட்டு பயணமாக வந்திருக்கிறார். 2 நாள் சென்னை வந்திருக்கக்கூடிய அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் வரவேற்பு அளித்தனர். தி. நகர் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பேரறிவாளன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அலைய்டா குவேரா சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அளித்திருக்கக்கூடிய வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மக்களிடம் சேவை செய்வது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு சேவை செய்வதால் தொடர்ந்து மக்களுக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி பெறும் வரை நமது இலக்கு இருக்க வேண்டும் என தெரிவித்தார்
அலெய்டா குவேரா பேச்சு
"எனக்கு மிகப் பெரிய அன்பை கம்யூனிஸ்ட் கட்சியினர் வழங்கி இருக்கின்றனர். மருத்துவராக பணி செய்ததில் சிறந்த மனிதராக மாற்றி இருக்கிறது.
நான், மக்களிடம் சேவை செய்வது பெருமையாக இருக்கிறது. போராட்ட வீரர், மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களை சந்தித்தில் பெருமையாக இருக்கிறது. சேகுவேரா மீது ஏராளமானோர் காட்டும் அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது மக்களுக்காக நாம் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நமது இலக்கு" என்றார்.
What's Your Reaction?






