பொங்கலன்று SBI வாங்கி தேர்வு... தேதியை மாற்றக்கோரி தொடரும் போராட்டம்!
பொங்கலன்று வங்கித்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். இதுகுறித்து சு.வெங்கடேஷன் கூறுகையில், “ஏற்கனவே தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என கடிதம் எழுதிய நிலையில் இன்று(13-01-2023) மாலை 5.30 மணி வரை பதில் இல்லை. 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் மாலை இந்தியா முழுவதும் தேர்வு நடைபெறுவதால் ஒத்தி வைக்க முடியாது என்ற பதில் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்றுகொள்ள முடியாது. இந்த தேர்வை 2 ஆயிரம் நபர்கள் எழுதுவார்கள் என தகவல் வந்தது ஆனால் உண்மையில் 13 ஆயிரம் நபர்கள் தமிழகத்தில் இருந்து எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 13 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிப்பு அடையும். பொங்கல் பண்டிகை குறித்து தெரிந்தும் நிதி அமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டின் கலாசாரத்தை மதிக்காமல் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

பொங்கலன்று வங்கித்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேஷன் கூறுகையில், “ஏற்கனவே தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என கடிதம் எழுதிய நிலையில் இன்று(13-01-2023) மாலை 5.30 மணி வரை பதில் இல்லை. 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் மாலை இந்தியா முழுவதும் தேர்வு நடைபெறுவதால் ஒத்தி வைக்க முடியாது என்ற பதில் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஏற்றுகொள்ள முடியாது.
இந்த தேர்வை 2 ஆயிரம் நபர்கள் எழுதுவார்கள் என தகவல் வந்தது ஆனால் உண்மையில் 13 ஆயிரம் நபர்கள் தமிழகத்தில் இருந்து எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 13 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிப்பு அடையும். பொங்கல் பண்டிகை குறித்து தெரிந்தும் நிதி அமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டின் கலாசாரத்தை மதிக்காமல் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






